டெல்லியில் கடந்த நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட வங்கதேசத்தை சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட வங்கதேச நாட்டைச் சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாமிலி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து 12 பேர் மீதும் 1946 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டினர் சட்டத்தை மீறியதாக ஷாமிலி மாவட்டத்தில் தானா பவன் காவல்நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த 12 பேரும் பசானி கிராமத்தில் இருக்கும் ஒரு மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.