Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் குறித்த சிபிசிஐடி விசாரணை இன்று முதல் தொடக்கம்…

பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி இன்று முதல் அந்த வழக்கை நேர்மையாகவும் நியாயமாகவும் விசாரிக்க தொடங்கியுள்ளதாக சிபிசிஐடி உயரதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அயோக்கியர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறை  கைது செய்து உள்ளது இதனை தொடர்ந்து இந்த வழக்கில் பெரிய பெரிய பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வந்த பொழுது சரியான புலன்கள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி ஆனது இந்த வழக்கை இன்று முதல் விசாரிக்க தொடங்கியுள்ளது

இந்த வழக்கை விசாரிக்க உள்ள சிபிசிஐடி உயரதிகாரி இந்த வழக்கை நியாயமாகவும் நேர்மையாகவும் கையாளுவோம் என்று அவர் தெரிவித்திருந்தார் மேலும் இந்த விசாரணையில் டிஎஸ்பி மற்றும் 5 இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு விசாரணைகள் ஆனது இன்று முதல் தொடங்க உள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்

இந்த வழக்கை காவல்துறையினர் பெரும்பகுதி முடித்துவிட்டதாகவும் அவர்கள் சேகரித்த தகவல்களை ஒருமுறை தரவு செய்து அதிலிருந்து விசாரணையை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் இந்த வழக்கை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அந்த அளவுக்கு விசாரணையை தீவிரப்படுத்தி வேகமாக முடிக்க முயற்சி செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான செயல்பாடுகளை செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்…

Categories

Tech |