மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வருமானம் சிறப்பாகவே இருக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு இன்றைய நாளாக அமையும் என்று அதிர்ஷ்டகரமான நாளாகவே இருக்கும். பெரிய முதலீடுகளை கடனாக கொடுப்பதை மட்டும் தவிர்த்துவிடுங்கள். சிலருக்கு கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கு சிக்கல்கள் இருக்கும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
பிரச்சனைகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள், இருந்தாலும் தேவையில்லாத பிரச்சனைகளுக்கு செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம். பஞ்சாயத்துகளும் ஏதும் வேண்டாம். கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது சில வாக்குவாதங்கள் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் நிலையைப் பொறுத்த வரை எந்தவித பிரச்சனையும் இல்லை சிறப்பாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்