கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் நல்ல செயலை சிலர் குறை சொல்லக்கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராகவே இருக்கும். வாகனத்தில் பராமரிப்பு செலவு ஏற்படலாம். இன்று சிலருக்கு பொருள் தேக்கம் ஏற்படும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கைநழுவிப் போகும். தொழிலாளர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்வதில் தடைகள் ஏற்பட்டு அவர்களால் சில பிரச்சினைகள் நீங்கள் சந்திக்கக்கூடும்.
பொறுமையும் நிதானமும் இருந்தால் மட்டுமே இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். முடிந்தால் இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். ஓரளவு நல்லபடியாகவே நடக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும் குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். சகோதரர் வகையிலும் உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். காதலர்களுக்கு இன்று காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். காதலில் வெற்றி பெற கூடிய சூழலும் அமையும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்வது ரொம்ப நல்லது. செய்யும் காரியங்களில் வெற்றி ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்