தனுசு ராசி அன்பர்களே..! இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். கடந்தகால முயற்சிக்கான பலன்கள் இன்று கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் உயரும். பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். அவர்கள் விஷயத்தில் மட்டும் கவனமாக இருங்கள். மன சஞ்சலங்கள் அதிகரிப்பதால் அமைதிக் குறைவு போன்றவை ஏற்படக்கூடும்.
திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். புதிய முயற்சி மற்றும் தயவுசெய்து இன்று கைவிட்டு விடுங்கள். கணவன் மனைவியை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை சுமுகமாகவே எல்லாம் செல்லும். பிள்ளைகள் நலனுக்காக இன்று பாடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபட்ட சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்