பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் இதுவரை வெளியான காணொளியை தொடர்ந்து தற்போது மீண்டும் மற்றொரு காணொளி ஒன்று வெளியாகியுள்ளது இந்த காணொளியில் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இடம்பெற்று உள்ளார் இதனை அறிந்த பொதுமக்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்
பொள்ளாச்சியில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் நடத்தி அவர்களை வல்லுறவுகளுக்கு உள்ளாக்கிய சில காமக் கொடூரர்கள் தற்பொழுது காவல்துறையிடம் சிக்கி குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர் இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து விசாரணை என்பது நடைபெற்று வருகிறது இதில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய நபர்கள் இதில் சம்பந்தப்படுத்தப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைதாகி வருகிறார்கள்
இதனைத்தொடர்ந்து விசாரணையில் காவல்துறையினரால் அந்த இளைஞர்களிடம் இருந்து சில காணொளிகள் கைப்பற்றப்பட்டனர் அந்த காணொளியில் ஒரு 4 காணொளிகள் மட்டுமே உள்ளதாக அந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி பேட்டி அளித்திருந்தார் இதனை தொடர்ந்து அதில் சம்பந்தப்படாத மற்றொருவரின் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது அந்த காணொளியில் உள்ளவர் அதே பொள்ளாச்சி பகுதியில் மதுபான கடை வைத்து நடத்தி வருகிறார் அந்தக் காணொளி ஆனது வேறு யாராலோ சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது
இதனை தொடர்ந்து அதனை கண்ட பொள்ளாச்சி மக்கள் நேரடியாக அந்த மதுபான கடைக்கு சென்று அவரது கடையை அடித்து உதைத்து சூறையாடி மேலும் இப்படிப்பட்ட நபரை வெளியில் விட்டு வைக்கக்கூடாது ஆகையால் அவனை கைது செய்ய வேண்டும் என்று அந்த ஊர் பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதனைத் தொடர்ந்து இந்த காணொளி மற்றும் அந்த நபர் குறித்த தகவல்கள் ஆனது தமிழ்நாடு முழுவதும் பரவி வருகிறது மேலும் அந்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அந்த நபரானவர் முன்னாள் அதிமுக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது..