மீனம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் வருமானம் உயரும். பூர்வீக சொத்து மூலம் திடீர் லாபம் வரும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். உங்களுக்கு எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் ரொம்ப நல்லது. பண விவகாரங்களில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். யாருக்கும் எப்பொழுதுமே வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து விடாதீர்கள்.
நினைத்த காரியம் நடப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். எந்த ஒரு செயலிலும் நிதானமும் பொறுமையும் இருந்தால் காரியங்கள் நல்லபடியாகவே நடக்கும். உங்களுடைய வாக்கு வன்மையால் சில காரியங்கள் மேம்படும். இன்று அக்கம்பக்கத்தில் முழு ஆதரவும் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். தூரதேசத்திலிருந்து நல்ல தகவலும் வந்துசேரும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை. சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்வதும், சரியான நேரத்திற்கு தூங்க செல்வது மிக முக்கியமானதாக இருக்கும்.
வாகனத்தில் செல்லும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வாகன பராமரிப்புச் செலவு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியம் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான விசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்