முட்டையை வைத்து ஒரு 10 நிமிடத்தில் ரொம்ப ஈஸியான சைடு டிஷ் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 3 ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
சோம்பு – ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 4
கொத்தமல்லித்தழை- தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
வத்தல் பொடி – ஒரு டீஸ்பூன்
மல்லி தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
மிளகு பொடி – அரை டீஸ்பூன்
முட்டை – 4
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து அதில் 3 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் ஒரு பட்டை, இரண்டு கிராம், சோம்பு ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் இதோடு சேர்த்து கொண்டு கிளறிவிடுங்கள். பின்னர் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள், பிறகு இதோடு பொடியாக நறுக்கிய மிளகாய், கறிவேப்பிலை இவை இரண்டையும் சேர்த்து கிளறி விட்டு, பொடியாக நறுக்கிய தக்காளி இரண்டு சேர்த்து வதக்குங்கள்.
அதன் பிறகு 2 தக்காளியை பேஸ்டாக அரைத்து வைத்து கொண்டு ஊற்றி பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி கிளறி கொள்ளவும். வத்தல் பொடி ஒரு ஸ்பூன், மல்லித் தூள் ஒரு ஸ்பூன், மிளகு பொடி அரை ஸ்பூன், கரம் மசாலா கால் ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, இவை அனைத்தையும் இதோடு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கிளறி வதக்கிக் கொள்ளுங்கள்.
வதக்கிய பின்னர் சிறிதளவு அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் நன்றாக கிளறி விட்டு, சூடேறியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து கிளறிவிட்டு, மிதமான சூட்டில் கொதிக்க விடுங்கள். 4 முட்டையை அவித்து அதை சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக கொதித்த பின்னர், இந்த கிரேவியில் சேர்த்து லேசாக கிளறி விட்டு மசாலா ஒன்று சேரும்படி கிளறி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். முட்டை கிரேவி ரெடி..!
தேவையான பொருட்கள் என்னை 3 ஸ்பூன் பட்டை 1 கிராம்பு 2 சோம்பு ஒரு சிட்டிகை பெரிய வெங்காயம் மூன்று தக்காளி-2 தக்காளி 5 கொத்தமல்லித்தழை தேவையான அளவு பச்சை மிளகாய் 2 கறிவேப்பிலை தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் வத்தல் பொடி ஒரு டீஸ்பூன் மல்லி தூள் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான அளவு கரம் மசாலா அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை மிளகு பொடி அரை டீஸ்பூன் முட்டை 4