Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா பற்றி வதந்தி – மாரிதாஸ் மீது வழக்கு பதிவு ….!!

கொரோனா வைரஸ் பற்றி வதந்தி பரப்பிய மாரிதாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்த நிலையில் உயிரிழந்தோரின் எண்னிக்கை 5ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7ஆகவும் இருந்து வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் வதந்திகளும் பரவியது. இதனை கட்டுபடுத்த மத்திய மாநில அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. ஆங்கங்கே வதந்தி பரப்பியவர்களை கைது செய்த படலமும் தொடங்கியது. இந்நிலையில்

கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பியதாக மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இரு சமூகத்திரரிடையே பிரிவை ஏற்படுத்தும் விதமாக ஏப்ரல் 2ம் தேதி பேசியதாக இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில் மாரிதாஸ் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |