Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வேலைக்கு வராதீங்க, சம்பளம் உண்டு…. புதுவையில் 21 போலீசுக்கு உத்தரவு …!!

புதுசேரியில் 21 காவலர்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை 4 பேருக்கு கொரோனா நோயால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதித்த 3 பேர் அரியாங்குப்பம் பகுதியிலும், ஒருவர் திருவட்டார் பகுதியிலும் வாசிக்கக்கூடியவர். இந்நிலையில் அந்தப் பகுதியில் இருக்க கூடிய 2 காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 21 காவலர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள புதுச்சேரி காவல் துறை உத்தரவிட்டு இருக்கின்றது.

அரியாங்குப்பம், திருவட்டார் பகுதி முழுவதுமாக மக்கள் வெளியே வராதபடி தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில் அங்கு இருந்த போலீசார் மூலமாக நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு ஏற்ப்பட்டு விடும் என்பதால் 21 பேரும் பணிக்கு வர வேண்டாம் என்றும்,  அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |