தினமும் நாம் சமையலுக்கு பயன்படுத்தி வரும் கொத்தமல்லி இலையின் நாம் அறியாத மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு
எந்த உணவுப் பொருட்களிலும் இல்லாத அளவு அதிக அளவு சத்துக்களை கொண்டது கொத்தமல்லி இலை. அதில் இருக்கும் சத்துக்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் பி1, கால்சியம், இரும்புச்சத்து, தயாமின், நியாசின், பாஸ்பரஸ், சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், போலிக் அமிலம், கொழுப்பு சத்து, நீர்ச் சத்து, நார்ச் சத்து இன்னும் பல.
இத்தனை சத்துக்களை உட்கொண்ட கொத்தமல்லி இலையை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
- கொத்தமல்லி இலையை சரியான அளவு உணவில் சேர்த்துக் கொள்வதனால் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
- கொத்தமல்லி இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.
- பசியின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கொத்தமல்லி சாப்பிட்டுவந்தால் பசியைத் தூண்டிவிடும்.
- கொத்தமல்லி இலையை தொடர்ந்து சாப்பிடுவதனால் கல்லீரலின் செயல்பாட்டை சரிசெய்து கல்லீரலை பலப்படுத்தும்.
- கொத்தமல்லி இலை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்கி இன்சுலின் சுரக்க வழி செய்யும்.
- கொத்தமல்லி இலை வாயுத் தொல்லைகளுக்கு மருந்தாகி செரிமான பிரச்சனையையும் குணப்படுத்தும்.
- கொத்தமல்லி இலை சாப்பிடுவதனால் கண் பார்வைக் கோளாறுகளை சரி செய்து பார்வைத் திறனை மேம்படுத்தும்.