பேரிச்சம் பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
உடலில் சத்து அதிகரிக்க பாலுடன் சேர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடலாம் என்று பலர் அறிவுரை கூறி கேட்டிருப்போம். பேரிச்சம் பழத்தில் பல நன்மைகள் அடங்கி இருக்கிறது. அது குறித்து விரிவாக காணலாம். தினமும் குறைந்தது இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவது நன்மை தரும்.
இதில் இயற்கையாகவே குளுக்கோஸ், பிரக்டோஸ், சர்க்கோஸ் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் என்பது இருக்காது. உடல் சோர்வு, ஹீமோகுளோபின் குறைபாடு போன்ற பிரச்சனைகள் வரும் தொல்லை இருக்காது. பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.