சீத்தா பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
சீத்தாப்பழத்தை நாள்தோறும் சாப்பிடுவதால் உடலில் உள்ள ரத்த அணுக்கள் அதிகரிக்கும். உடலில் உள்ள நரம்புகள் வலுப்படும். உடல் சோர்வை முற்றிலுமாக அகற்ற கூடிய சக்தி சீத்தாப்பழத்திற்கு உண்டு. ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு இதனை கொடுப்பதின் மூலம் அவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாவார்கள். மாரடைப்பு வராமல் சீதாப்பழம் பாதுகாக்கும். மூச்சுக்குழாய் அழற்சி ஆஸ்துமா வராமல் தடுக்க கூடிய சக்தியும் இதற்கு உண்டு. ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உகந்தது.