உடல் எடை குறைக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இக்காலகட்டங்களில் பெரும்பாலானோர் தங்களது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் எம்மாதிரியான உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். முட்டையை காலை உணவாக உட்கொள்ள நினைத்தால் அதை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சமைத்து உண்ண வேண்டும். இதனால் சரியான அளவில் நல்ல கொழுப்புகள் உடலுக்கு கிடைக்கும், உடல் எடை குறையும். மதியம் உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை முட்டையுடன் சேர்த்து சோறு இல்லாமல் சாப்பிடும்போது உடல் எடை வேகமாக குறையும்.