பாதத்தில் மசாஜ் செய்வதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கின்றனர். இக்காலகட்டங்களில் மக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால், 24 மணி நேரமும் டிவி பார்ப்பது, மொபைல் நோண்ட , விளையாட என நேரத்தை ஏதாவது ஒரு விதத்தில் செலவிட வேண்டும். அப்படி செலவிட்டால் தான் போர் அடிக்காமல் இருக்கும்.
இம்மாதிரியான கால கட்டங்களில் நாம் நமது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தலாம். அந்த வகையில், தினசரி பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் பாதங்களை மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மசாஜ் செய்யும்போது குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடலில் ரத்த அழுத்தம் சீராகும். ரத்த ஓட்டம் சமமாகி நிம்மதியான தூக்கம் கிடைக்கும். தசைப்பிடிப்பு, உடல் சோர்வு ஆகியவற்றை நீக்கும். மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஏற்படக்கூடிய வலிகளை குறைக்கும்.