பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்ட நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய மக்களுடன் தொலைக்காட்சி வழியாக, சமூக வலைதளங்கள் வழியாக உரையாடல் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இதற்கு முன்பாக மக்களை கைதட்ட சொன்ன அவர் தற்போது மின் விளக்குகளை அணைத்து வீட்டின் வாசலில் 9 நிமிடங்கள் விளக்கு வைக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.
அவரது அறிவுரையை ஏற்று பலரும் அதற்கு முன் வந்த நிலையில், ஒரு சிலர் அதனை கேலி கிண்டல் செய்தும், பாரதப் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியும் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரியில் குறித்து அவதூறாக பேசிய வெளியிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடியோ வெளியிட்டது தொடர்பாக கிள்ளியூர் ஒன்றிய பாஜக செயலாளர் செந்தில் என்பவர் அளித்த புகாரின் பேரில் 4 பேரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.