Categories
தேசிய செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு…. கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்….. பஞ்சாப் மக்கள் பூரிப்பு…!!

காற்று மாசு குறைந்ததன் காரணமாக பஞ்சாபில் தூரத்தில் உள்ள பனிமலை மிகத் தெளிவாக அழகாக காட்சியளித்து  கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு இருப்பதால் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் இருந்து 213 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இமயமலையில் பனியுடன் தற்போது காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. முற்றிலும் காற்று மாசினால் மறைக்கப்பட்டிருந்த அந்த மலை கடைசியாக 25 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இம்மாதிரியாக காட்சி அளித்ததாகவும், அதற்குப்பின் தற்போதுதான் பனிமலை காட்சி அளிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், ஊரடங்கு நடைபெறும் இந்த சமயத்தில் அவரவர் மொட்டை மாடியில் நின்றுகொண்டு அழகாக காட்சியளிக்கும் பனிமலையை ரசித்துக் நாட்களை கழித்து வருகின்றனர்.

Categories

Tech |