தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தை நடுங்க வைத்து வருகின்றது. கடந்த 6 நாட்களாகவே 50க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 485 பேர் கொரோனா பாதித்தவர்களாக இருந்த நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார்.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தெரிவித்த அவர் 127 பேர் அரசு கண்காணிப்பிலும், 90824 பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.