Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் சோர்வா… இதை இரண்டையும் சேர்த்து குடிங்க…!!

வெண்ணீரில் மிளகுத்தூள் கலந்து குடிப்பதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு

  • வெந்நீருடன் சிறிதளவு மிளகுத் தூளை கலந்து குடித்துவந்தால் உடலில் இருக்கும் செல்கள் ஊட்டம் பெற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இதனால் நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும்.
  • வெந்நீருடன் மிளகுப் பொடியை கலந்து தினமும் குடித்து வருவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து சோர்வு, வறட்சி நிறைந்த சருமம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.
  • வெந்நீருடன் மிளகு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடலின் உள்ளுறுப்புகள் சீராக இயங்கும். உடலும் வலிமை பெறும்.
  • மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்நீருடன் மிளகுப் பொடியை கலந்து குடித்து வருவது நல்லது.
  • மிளகு பொடி கலந்த தண்ணீரை தினமும் குடித்து வருவதால் கலோரிகள் குறைக்கப்பட்டு உடல் எடை அதிக அளவு குறையும்.
  • வெறும் வயிற்றில் வெந்நீருடன் மிளகுப் பொடியை கலந்து குடிப்பதனால் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

Categories

Tech |