Categories
மாநில செய்திகள்

அணைந்தது மின் விளக்கு.. ஒளிர்ந்தது தமிழகம்.. ஒற்றுமையை வெளிப்படுத்திய மக்கள்..!!

கொரோனாக்கு எதிரொலியாக பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் விளக்கு ஏற்றி மக்கள் ஓற்றுமையை வெளிப்படுத்தினர்.

பிரதமரின் அழைப்பை ஏற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றார். சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அகல் விளக்கு ஏற்றினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் விளக்கு ஏற்றினார். தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் பிரதமரின் அழைப்பை ஏற்று விளக்கு ஏற்றினர்.

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் விளக்கேற்றி அமைச்சர் செங்கோட்டையன் கொரோனா அச்சுறுத்தல் நீங்க வேண்டி தனது பணியாளர்களுடன் சேர்ந்து பிரார்த்தனையிலும் ஈடுபட்டார். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் சேர்ந்து தீபமேற்றி ஒற்றுமைக்கான வெளிச்சத்தை ஒளிரச் செய்தார்.

போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன் நின்று வீதிக்கு வந்து மெழுகுவர்த்தி ஏந்தி நின்றார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வானுயர்ந்த கட்டிடத்தில் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக அகல்விளக்கு ஏற்றி அசத்தினர்.

மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி என தமிழகம் முழுவதும் விளக்குகள் அணைக்கப்பட்டு தீபம், டார்ச் லைட் ஒளி, மெழுகுவர்த்தி, செல்போன் ஒளி என வெளிச்சத்தை ஒளிர விட்டு ஒற்றுமையை மக்கள் பதிவு செய்தனர்.

Categories

Tech |