Categories
மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மலேசியாவிற்கு தப்பி செல்ல முயற்சி: 10 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 10 பேரும் மலேசியா செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக மலேசியா நாட்டவா்கள் பலா் இந்தியாவில் சிக்கியுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவு மலேசியா்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசுடன் பேசிய மலேசியா அரசாங்கம், தங்கள் நாட்டவரை தனி சிறப்பு விமானங்களில் மலேசியா அழைத்து செல்ல அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், மத்திய அரசு மனிதாபிமானம் அடிப்படையில் அனுமதி வழங்கியது.

அதன்பேரில் கடந்த வெள்ளிக்கிழமை மலேசியாவிலிருந்து மலிண்டா ஏா்லைன்ஸ் விமானங்கள் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தன. சென்னையிலிருந்து மலேசியா்கள் 344 பேரை ஏற்றிச் சென்றது. அதேபோல, இன்று காலை 10.40 மணிக்கு மலேசியா தலைநகா் கோலாலம்பூருக்கு பாடிக் ஏா்லைன்ஸ் என்ற சிறப்பு தனி விமானம் புறப்பட்டு சென்றது. அதில் தமிழகத்தில் தங்கியிருந்த 127 மலேசியா்கள் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருந்தனா்.

அதில், 10 பேர் டெல்லியில் நடந்த மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என தெரிந்தது. நாடு முழுவதும் டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், இவர்கள் தப்பிச்செல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 10 பேர் மீதும் 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |