Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏப்., 10 முதல் தமிழகத்தில் அதிதீவிர பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா சோதனை – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. 3ம் நிலைக்கு போகக்கூடாது என ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் இன்று காலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில் அனைத்து மாவட்ட முதல்வர்களும் பங்கேற்ற நிலையில், இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, கொரோனோவை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது என கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் இதுவரை 6,612 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேவையான மருத்துவ வசதி, முக கவசம், மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன.

3,371 வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. 2,500 வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்படும் கருவிகள் வரும் ஏப்., 9ம் தேதி கிடைக்கும்.

ஏப்., 10 முதல் தமிழகத்தில் அதிதீவிர பரிசோதனை கருவிகள் மூலம் சோதனை நடைபெறும். 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன. விமான நிலையத்தில் 2,10,538 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து வருகிறது 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |