அமெரிக்கா வனஉயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று எதிரொலியாக இந்தியாவில் நாடு முழுவதும் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை கண்காணிக்க உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்கவும், நோய்வாய்ப்பட்ட விலங்குகளை தனிமையில் வைத்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளின் ரத்த மாதிரிகளை உடனடியாக ஆய்வகங்களுக்கு அனுப்பவும் வன உயிரியல் பூங்காகளுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவை துவம்சம் செய்துள்ளது. கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் வரிசையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கின்றது. அங்கு 3,36,830 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் இருக்கும் புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வந்த பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அந்த பூங்காவில் பணியாற்றியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர் மூலமாக பெண் புலிக்கு கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.