Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 415 பேருக்கு… அறிகுறி இல்லாமல் இருந்த கொரோனா…. குழம்பி நிற்கும் மருத்துவர்கள்….!!

தமிழகத்தில் 571 பேருக்கு குறைவான உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 415 பெயருக்கு அறிகுறி ஏதும் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது. ஆனால் அதன் அறிகுறிகள் இன்னும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. தாக்கத்தை மூன்று அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனும் சூழல் இருந்தது. அவை, வறட்டு இருமல், காய்ச்சல், உடல் சூடு அதிகரித்தல். ஆனால் தற்போது உள்ள நிலையில் பல நாடுகளில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பரவிவருகிறது.

ஒருவருக்கு அறிகுறி ஏதும் இல்லாமல் இருந்தால் அவர் பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்வார். அவரிடமிருந்து பல பேருக்கு கொரோனா எளிதில் பரவும். தமிழகத்திலும் இவ்வாறு நடக்கிறது சில நோயாளிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை எனக் கூறப்படுகிறது ஆனால் அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் வந்த முடிவுகள் எதிர்மறையாக இருக்கின்றன. 21 நாட்கள் கழிந்த பின்னர் திடீரென அறிகுறிகள் ஏற்பட்டு சோதனை மேற்கொண்டால் கொரோனா இருப்பதாக முடிவுகள் கிடைக்கப் பெறுகிறது.

தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. ஆனால் தற்போது எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் பரவிவருகிறது அமெரிக்காவில் 30% பேருக்கு அறிகுறி ஏதும் இல்லாமல் கொரோனா ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஐஸ்லாந்தில் 50% பேர் கொரோனா  அறிகுறி ஏதும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலோ 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 415 பேருக்கு கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் இல்லை. அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ள சம்பவம் குழப்பத்தை அதிகரித்துள்ளது.

Categories

Tech |