Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பிய பிரபல பாடகி…!!

பிரபல பாடகியான கனிகாகபூர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளார்.

கடந்த மாதம் 9ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பிய கனிகாகபூர் கொரோனா அறிகுறிகளுடன் இருந்துள்ளார். ஆனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் லக்னோவில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த விருந்தில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து உள்ளனர்.

கனிகாகபூருக்கு அறிகுறி இருப்பதாக தெரிய வந்த நிலையில் பெரும் சர்ச்சை எழுந்தது இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாத கனிகாகபூர் மீது லக்னோவின் தலைமை மருத்துவ அதிகாரி அவர்கள் புகார்கொடுத்துள்ளார். பின்னர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கனிகாகபூருக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டு லக்னோவில் இருக்கும் சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நான்கு முறை அவருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டு கொரோனா இருப்பதாகவே முடிவுகள் வந்துள்ளது. இதனால் கனிகாகபூர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என மேலும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. அதனை தொடர்ந்து அவர் இன்று வீடு திரும்பியுள்ளார்.

Categories

Tech |