Categories
தேசிய செய்திகள்

ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இந்தியாவிடம் விண்ணப்பம்: ஐசிஎம்ஆர்

ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இதுவரை விண்ணப்பித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன.

இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆரய்ச்சி கழகத்தின் துணை இயக்குனர் டாக்டர் ரமன் கங்காகேக்டர் தகவல் அளித்துள்ளார். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது. மொத்த எண்ணிக்கை 70,172 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது.

இதையடுத்து உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,282,041 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 269,451 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஸ்பெயினில் கொரோனாவால் ஒரே நாளில் 414 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத உயிரிழப்புகள் எண்ணிக்கை 13,055 ஆக உயர்ந்துள்ளது. பெல்ஜியத்தில் இன்று மட்டும் 185 பேர் மரணமடைந்துள்ளனர்.

மொத்த பாலி எண்ணிக்கை 1,632 ஆக உள்ளது. முன்னதாக, நாட்டில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் எனும் மலேரியா எதிர்ப்பு மருந்தை சக மருத்துவர்களின் பரிந்துரைப்படி எடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்தது. அதேபோல, அமெரிக்க அதிபரும் கொரோனா தடுப்புக்கு இந்த மலேரியா தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், மலேரியா தடுப்பு மருந்து கேட்டு இதுவரை 30 நாடுகள் இந்தியாவிடம் விண்ணப்பம் அளித்துள்ளது.

Categories

Tech |