Categories
அரசியல்

கொரோன சிகிச்சைக்கு தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் – விஜயகாந்த்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தேமுதிக தலைமை அலுவலகத்தையும் கல்லூரியையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்

உலக நாடுகளில் பரவிய கொரோனா தோற்று நோய் தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கி 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்து பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய் சிகிச்சைக்கு தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தையும் மேல்மருவத்தூர் அருகில் இயங்கிவரும் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என தமிழக அரசுக்கு விஜயகாந்த் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Categories

Tech |