டெல்லியில் ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் 421 அரசுப் பள்ளிகளில் ரேஷன் விநியோகிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நபருக்கும் 4 கிலோ கோதுமை மற்றும் ஒரு கிலோ அரிசி கிடைக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதுபோன்று 10 லட்சம் பேருக்கு ரேஷன் வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனவும், தேவைப்பட்டால் மையத்திலிருந்து அதிக உணவு தானியங்களை எடுத்துக்கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தினசரி தொழிலாளர்கள் மற்றும் சாமானியர்களுக்கு மகழ்ச்சி அளித்துள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் COVID19 சோதனைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துள்ளதாக கூறினார். ஏற்கனவே 1 லட்சம் ரூபாய்க்கு சோதனை கருவிகள் ஆர்டரை செய்துள்ளதாகவும், 27,000 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கருவிகள் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேருக்கு புதிதாக கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது.
அதில் 10 பேர் தப்லிகி ஜமாஅத் நிகழ்வில் பங்கேற்றவர்கள். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 25 நோயாளிகள் வெண்டிலெட்டர்கள் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 330 பேர் டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் தினமும் 1000 மாதிரிகள் சோதிக்க படுவதாக டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.