Categories
உலக செய்திகள்

கடும் தட்டுப்பாடு… காரின் உதிரி பாகத்தில் வெண்டிலேட்டர்கள்… யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட TESLA நிறுவனம்!

அமெரிக்காவில் வாகன உதிரி பாகங்களால் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கப்படும் என்று பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தெரிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது கொரோனா வைரஸ்.இந்த வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அனைத்து நாட்டு மக்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுள் தற்போது முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான்.அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

Tesla Shows Off Prototype Ventilator For COVID-19 Patients Made ...

உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் வெண்டிலெட்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியுள்ளது. அதேபோல அமெரிக்காவிலும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க  வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசு வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தது.

Tesla reveals its ventilator prototype on YouTube - Technology

அந்த கோரிக்கையை தொடர்ந்து வாகன உதிரி பாகங்களால் இந்த வெண்டிலேட்டர்களை தயாரிக்க இருப்பதாக டெஸ்லா நிறுவன பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (tesla) தாங்கள் தயாரிக்கும் வெண்டிலட்டரின் முன்மாதிரியை தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

Categories

Tech |