Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் 2வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு: ஏப்.15 வரை மக்கள் வெளியே வர தடை

நேபாளத்தில் ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில், ஏப்ரல் 15ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில் இமாலய தேசமான நேபாளம், கோவிட்19 காய்ச்சலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் என்று நேபாளம் அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மார்ச் 29ம் தேதி ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 7ம் தேதி வரை நீட்டிப்பதாக தெரிவித்திருந்தது.

நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடையும் நிலையில், மேலும் 8 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நாடு தழுவிய போராட்டத்தில் கொரோனா தாக்கல் 2ம் கட்டத்தை நெருங்கியதால் இந்த முடிவு எடுக்கப்படியுள்ளதாக அரசு உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் இதுவரை கொரோனா தொற்றால் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் குணமடைந்துள்ளார்.

Categories

Tech |