இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4281 ஆக உயர்வு. 24 மணிநேரத்தில் 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொடிய நோயான கொரோனா உலக மக்களை அச்சத்தில் மூழ்கடித்தி வீட்டிற்குள் முடக்கியது. இந்தியாவிலும் பரவத்தொடங்கியது கொரோனா. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த பொழுதிலும் கொரோனா பரவுவதை தடுக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது.
இதுவரை இல்லாத அளவு கொரோனா தொற்றிற்கு கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 704 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4281 ஆக அதிகரித்துள்ளது. இதில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 3851, குணமடைந்தவர்கள் 31, உயிரிழந்தவர்கள் 111.