இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ள நிலையில் 391பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 50 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக கோவையில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய அரசு பலவேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பிரதமர் மோடி தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் தமிழக கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு ரூ.500 கோடி வழங்கி உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.