சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் திருவண்ணாமலை மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
உலகில் வேகமாகப் பரவிவரும் கொரோனா முதலில் பரவத்தொடங்கியது சீனாவில். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம் மற்ற நாட்களில் திருவண்ணாமலை மலைப் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் மலையில் ஆள்நடமாட்டம் தென்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்று நேற்று முன் தினம் வனத்துறையினர் மலைமீது சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது மலைக்குகையில் பதுங்கி இருந்த ஒருவரை வனத்துறையினர் மீட்டு கீழே அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சீனாவை சேர்ந்த யாங்யாஒர் என்பதும் அவர் சுமார் 11 நாட்களாக மலையில் பதுங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் அவரை வனத்துறையினர் வெளிநாட்டினர் உதவி மையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரை கொரோனா பரிசோதனைக்காக திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கொரோனா பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் இருக்கும் இந்த நிலையில் சீனாவை சேர்ந்த ஒருவர் மலைப்பகுதியில் இத்தனை நாட்களாக தங்கியிருந்தது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.