இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஆரோன் பிஞ்சும், உஸ்மான் க்வாஜாவும் களமிறங்கினர்.
ஆரோன் பின்ச் 27 ரன்னில் ஆட்டமிழக்க ஹேண்ட்ஸ் கோம்ப்பும், உஸ்மான் க்வாஜாவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி க்வாஜா 100 ரன்களும் , ஹேண்ட்ஸ் கோம்ப் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டும் , ஷமி அஹமத் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோஹித், தவான் இருவரும் களமிறங்கினர் .தவான் 12 ரன்னில் ஆட்டமிழக்க அதை தொடர்ந்து வந்த கோலி 20, பண்ட் 16, விஜய் சங்கர் 16, ஜடேஜா 0 ரன்கள் என அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஓரளவு தாக்கு பிடித்த ரோஹித் சர்மா 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வந்த கேதார் ஜாதவும், புவனேஸ்வர் குமாரும் வெற்றியை நோக்கி போராடினர். இறுதியில் புவனேஸ்வர் 46, ஜாதவ் 44 ரன்களில் இருவரும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 237 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் 5போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 : 2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றது. ஏற்கனவே நடைபெற்ற 2 டி 20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.