Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கு ? முதல்வர் அலுவலகம் விளக்கம் …!!

ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிக்கலாம் என பிசிஜி குழு பரிந்துரைத்துள்ளது என தெலுங்கானா முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும்கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 318 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 111 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய முதலே மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியது. ஊரடங்கு அமல் படுத்தி 11 நாட்கள் ஆகியும் கொரோனா வீரியம் அதிகரித்து கொண்டே வருகின்றது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 748 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 56 பேர் குணமடைந்து 45 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் ஊடங்கு மேலும் நீட்டிக்க படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் தெலுங்கானாவில் ஜூன் 3ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பு வெளியாகியது.

 

 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் அலுவலகம், தெலுங்கானாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க இன்னும் முடிவு செய்யவில்லை. ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்க பரிந்துரை செய்ததாக தெளிவு படுத்திய முதல்வர் அலுவலகம், ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிக்கலாம் என பிசிஜி குழு பரிந்துரைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. தெலுங்கானாவை பொருத்தவரை 321 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 34  பேர் குணமடைந்து 7 பேர் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |