Categories
உலக செய்திகள்

நாங்கள் கேட்ட மருந்துகளை தரவில்லை என்றால்.. இந்தியாவிற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.. அதிபர் ட்ரம்ப் மிரட்டல்..!!

அமெரிக்காவிற்கு இந்தியாவிடம் ஆர்டர் செய்த மருந்து உபகரணங்களை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என்று அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் பலி எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் 13 லட்சத்து 45 ஆயிரத்து 751 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 74 ஆயிரத்து 644 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 428 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு ஐரோப்பாவை திணறடித்த கொரோனா தற்போது அமெரிக்காவில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 233 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 352 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்கா ஆர்டர் செய்திருந்த கொரோனா சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை இந்தியா எங்களுக்கு வழங்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடும்போது வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால், உள்நாட்டில் தேவை அதிகரித்து வருவதால் அவ்வகை மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு சமீபத்தில் தடைவிதித்தது.  இதனால் டிரம்ப் கேட்ட மருந்து உபகரணங்கள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் இன்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
கேள்விகளுக்கு பதில் அளித்த ட்ரம்ப் , நான் பிரதமர் மோடியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசினேன். ஆர்டர் செய்த மருந்துகளை நாங்கள் பெற அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என கூறினேன். ஒரு வேளை அவர் மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி அளிக்க மறுத்தாலும் பரவாயில்லை. ஆனால், ஒருவேளை அப்படி நடந்தால் அதற்கான தகுந்த பதிலடி கொடுக்கப்படலாம்’’ என்று கூறினார்.

Categories

Tech |