தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் திடீரென்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பு பெற்று கொடுத்தது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தையும் இயக்கினார். அப்படமும் நல்ல வசூல் பெற்று வெற்றி படமானது.
ஆனால் தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இவர் இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் என்றும், டுவிட்டரில் மட்டும்தான் மட்டுமே இருக்கிறேன் என்றும் மற்ற அனைத்துகணக்குகளும் போலியானது என்று கூறியுள்ளார்.