Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்… சிகிக்சைக்கு ரெயில் பெட்டிகள் வார்டுகளாக மாற்றம்..இந்தியன் ரெயில்வே அறிவிப்பு..!!

கொரோனா தொற்றிருக்கு சிகிச்சை அளிக்க ரெயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றுவதற்கு பணிகள், இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நாட்டின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் இந்தியன் ரெயில்வே தன்னிடம் உள்ள வசதிகளை பயன்படுத்துவதற்கு முன்வந்து, 3.2 லட்சம் படுக்கைகளுடன் 20 ஆயிரம்  பெட்டிகளை வார்டுகளாக மாற்ற முடிவு செய்தது.

முதல் கட்டமாக 5 ஆயிரம் ரெயில் பெட்டிகளை தனிமைக்கான  வார்டுகளாக மாற்றுவதற்கு  நிர்ணயித்தது, அந்த இலக்கில் பாதியான 2 ஆயிரத்து 500 ரெயில் பெட்டிகளை குறுகிய காலத்தில் மாற்றி ரெயில்வே நிர்வாகம் சாதனை படைத்தது.

நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக மனிதவள ஆதாரம் குறைவாகவே உள்ளது. இதனால் சுழற்சிமுறை அடிப்படையில் தொழிலாளர்கள் வேலை பார்க்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரெயில்வேயின் பல மண்டலங்களும், குறுகிய நேரத்திற்குள், பெட்டிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு ‘வார்டாக மாற்றி அசாத்தியமான பணிகளை விரைவில் செய்து முடித்துள்ளது.

2 ஆயிரத்து 500 ரெயில் பெட்டிகள் தனிமைப்படுத்தலுக்காகவும் மாற்றி மற்றும் அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காகவும் 40 ஆயிரம் தனிமைப்படுத்தல் படுக்கை வசதிகள் தயாரான நிலையில் இருக்கிறது.  முதலில்உருவாக்கப்பட்ட மாதிரி வடிமைப்புக்கு ஒப்புதல் கிடைத்ததும், கிடைத்ததும், பெட்டிகளை வார்டுகளாக  மற்ற மேற்கொள்ளும் பணிகள்தொடங்கினர்  மண்டல ரெயில்வே நிர்வாகங்கள்.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 375 பெட்டிகளில் இந்த மாற்றங்கள் செய்து முடிக்கப்படுகின்றன. நாட்டில் 133 இடங்களில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றது. மருத்துவத்துறை அறிவுறுத்தல்களின்படியே அனைத்து ரெயில் பெட்டிகளிலும் சிகிச்சை அளிப்பதற்கான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவசர கால தேவைகளுக் காக மட்டுமே இந்த ரெயில்வே தனிமைப்படுத்தல் பெட்டிகள் மாற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |