Categories
உலக செய்திகள் சற்றுமுன்

மருந்து மூலப்பொருள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் – வெளியான பரபரப்பு தகவல் …!!

மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்ய இந்தியா விதித்திருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளை நடுங்கச் செய்துள்ள கொரோனா ஆயிரக்கணக்கான உயிர்களை  பறித்துச் சென்றது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது. ஒட்டுமொத்த ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா கதற விட்ட கொரோனா வைரஸ்சால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரம் ஸ்தபித்துள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் மருத்துவ பொருட்கள் தயாரிப்பதற்கு கூட நிறுவனங்கள் செயல்படவில்ல. கொரோனா அச்சத்தால் அனைவரும் முடங்கிக் கிடக்கும் நிலையில் ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் உதவியை நாடியுள்ளது.

அந்தவகையில் இந்தியாவையும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் நாடியது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை உள்ளதால் பல மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை வித்து உள்நாட்டு பயன்பாட்டுக்காக வைத்திருந்த இந்தியா தற்போது 21 மருத்துவ மூலப்பொருட்களுக்கான தடையை நீக்கியுள்ளது. மருத்துக்களை செய்யும் 24 மூலப்பொருட்களில் தடையை மத்திய அரசு நீங்கியுள்ளதால் இதனை இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளலாம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேரியாவை குணப்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருத்துக்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய கேட்டு இருந்தார். இந்தியாவில் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு ஆகிவிடக்கூடாது என்பதற்காக இந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு  தடை விதித்து இருந்தது.

இதனால் அமெரிக்காவுக்கு இந்த மருந்து கிடைக்குமா ? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்கா கேட்ட மருந்தை கொடுக்கவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது 24 மருந்துகளுக்கான மூலப்பொருட்களில் இருந்த தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |