Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,421ஆக உயர்வு… 114 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,421ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 4,421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 114ஆக அதிகரித்துள்ள நிலையில் 321 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |