Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர், செவிலியர்களுக்காக பிரார்த்தியுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் 4,421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 114ஆக அதிகரித்துள்ள நிலையில் 321 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுவதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், உறவினர்களுக்கு மட்டுமின்றி கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர், செவிலியர்களுக்காகவும் பிரார்த்தியுங்கள் என வலியுறுத்தியுள்ளார். ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும்.

நமக்காக மட்டுமின்றி பிறரின் நலனுக்காகவும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னிலை வகிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி என பிரதமர் மோடி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |