Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 3,300 பேர் ஆய்வு…. யாருக்கும் கொரோனா இல்லை – மாநகராட்சி ஆணையர்!

சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை என மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், சென்னையில் மளிகை பொருட்களை 5 கி.மீ. சென்று வாங்க வேண்டிய அவசியமில்லை.

வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். 2 கி.மீ தூரம் வரை நடந்தே சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ளலாம். ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். முதியவர்கள் உள்ள பகுதிகளில் தன்னார்வலர்கள் துணையுடன் உதவிகள் செய்யப்படுகின்றன.

தடையை மீறி காய்கறி வாங்குவதாக கூறி பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பைக்கில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். கொரோனோவின் வீரியத்தை புரிந்து கொண்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்திய அவர், சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 30 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரணமின்றி சுற்றித்திரிந்த 12 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் நோய்த்தொற்று தடுப்பு வளையத்திற்குள் வசிப்போருக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் கூறியுள்ளார்.

Categories

Tech |