வணிகர்கள் அரசுக்கு செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டத்தை செலுத்த தேவையில்லை என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் பிறப்பித்துள்ளார். அந்த அடிப்படையில் தற்போது நெல், சிறு தானியங்கள், பயிறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பெருங்காயம், புளி, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் ஒரு சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தற்போது நிலவிவரும் சூழலை கருத்தில் கொண்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விலை பொருட்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய ஏதுவாக தற்போது வியாபாரிகள் செலுத்தும் அந்த ஒரு சதவீத கட்டணத்தை 30.04.2020 வரை செலுத்த வேண்டியதில்லை என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விலை பொருட்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட ஏதுவாக தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்த விவசாய பொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய ஏதும் சிரமங்கள இருந்தால் தங்களது மாவட்ட வேளாண்துறை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என்றும், அதற்கான தொலைபேசி எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.அதே போல குளிர்பதன கிடங்கு களில் காய்கறி, பழங்களை சேமித்து வைப்பதற்கான கட்டணத்தையும் அரசே ஏற்கும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூபாய் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.