மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 891ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,421ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் எண்ணிக்கையானது தொடர்ந்து உயர்ந்தது வருகிறது. நேற்று ஒரே நாளில் 120 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் கொரோனா நோயினால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 868ஆக இருந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சங்கலி 1, பிம்ப்ரி-சின்ச்வாட் 4, அகமதுநகர் 3, புல்தானா 2, பிஎம்சி 10, தானே 1 & நாக்பூர் 2 என மொத்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 891ஆக உயர்ந்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. கோரோனோ வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் விதிகளை மீறியதாக 46 மீது வழக்கு செய்யப்பட்டு 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் உத்தரவுகளை மீறியதற்காக 826 வாகனங்களுக்கு எதிராக சல்லான்கள் மற்றும் அவர்களிடமிருந்து 3,06,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லம் அருகே டீ வியாபாரிக்கு கொரோனா உறுதியானதால் முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.