Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு …!!

 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை வேகப்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதித்தவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களை எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன.

முன்னதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் முழு உத்தரவு அமல் படுத்தபட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன அந்த வகையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி சார்பில் நடைபெற இருந்த தமிழ்நாடு தொழிற்சாலை துறையில் உதவி கண்காணிப்பாளர், உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு  ஊரடங்கு அமலில் இருப்பதால் தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

Categories

Tech |