Categories
மாநில செய்திகள்

சென்னையில் 3 வார்டுகளுக்கு ஒரு மருத்துவர் குழு வீதம் அமைக்கப்பட்டுள்ளது – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

தமிழகத்திலேயே சென்னையில் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நிலையில், சென்னையில் 3 வார்டுகளுக்கு ஒரு மருத்துவர் குழு வீதம் அமைக்கப்பட்டு உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திருவொற்றியூர் பகுதியில் கொரோனா அறிகுறி உள்ளதா என்று கண்டறிய வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகர் முழுவதும் 40 இடங்களில் நோய்த்தொற்று தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் 15 ஆயிரம் வட்டங்களாக பிரிக்கப்பட்டு, சுகாதார துறையின் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பொதுமக்கள் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், சென்னையில் தடை செய்யப்பட்ட 43 இடங்களில் காவல்துறை மூலம் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் 3 வார்டுகளுக்கு ஒரு மருத்துவர் குழு வீதம் அமைக்கப்பட்டு உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் அளித்துள்ளார். சென்னை பீனிக்ஸ் மால் ஊழியர்கள் 2 பேருக்கு மட்டுமே கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த மாலில் வேலை செய்த அனைவருக்கும் ஆய்வு செய்து பார்த்தோம். அதில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |