தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக முதலவர் அறிவித்துள்ளார்.
கொரோனா நோய் பரவுவதை தடுக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயை மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு வருடத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்த மத்திய அரசு அதனை கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
தற்போது மாநில அரசும் இதனை செயல்படுத்தும் விதமாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாய்யை மாநில அளவில் ஒருங்கிணைத்து கொரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே தொற்றுநோய் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் 25 லட்சம் ரூபாய் அந்த தொகுதியில் செலவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது.
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது 3 கோடியாக இருக்கிறது. இந்த நிலையில் 3 கோடியில் இருந்து ஒரு கோடி தற்போது கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .