Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா….. உயிரிழப்பு 7ஆக அதிகரிப்பு …!!

தமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது பெண்  உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 11 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது. 14000 சோதனை கருவிகள் தயார் நிலையில் உள்ளது என்று பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

 

Categories

Tech |