நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிக்காக 1.25 கோடி ரூபாய் அளித்துள்ளதால் அவரது ரசிகர்கள் #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்குமார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரது படம் குறித்த அறிவிப்பு ஏதாவது வெளியானாலோ அல்லது படம், டிரைலர், டீசர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியானால் போதும் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள். இந்த நிலையில் இன்று நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிக்காக 1.25 கோடி ரூபாய் அளித்துள்ளார்.
அதன்படி, பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், மாநில அரசுக்கு 50 லட்சம் ரூபாயும், பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம் என மொத்தம் 1.25 கோடி வழங்கியுள்ளார் தல அஜித் குமார். தமிழ் சினிமா துறையில் கொரோனா தடுப்பு நிதிக்கு நடிகர் ஒருவர் கொடுத்த அதிக தொகை இதுவாகும்.
இதனால் நடிகர் அஜித் குமார் நிதியளித்த செய்தி வெளியான அடுத்த நிமிடம் அவரது ரசிகர்கள் #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஸ்டேக்கை இந்தியளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். அஜித் ரசிகர்கள் ஒவ்வருவரும் ரியல் ஹீரோ, ஜென்டில் மேன், மனித கடவுள் என புகழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவியளிக்க கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்ற தல அஜித் குமார் 1.25 கோடி வழங்கியிருக்கிறார்.
#PerfectCitizenThalaAJITH-45K Tweets In National Trending#Valimai#Thala #AjithKumar pic.twitter.com/tY2vo5nLv0
— 𝐌𝐚𝐝𝐮𝐫𝐚𝐢 𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 𝐀𝐉𝐈𝐓𝐇 𝐅𝐚𝐧𝐬 (@AjithFCMadurai) April 7, 2020
https://twitter.com/TFC_mass/status/1247510221674524673
#BREAKING : Actor #ThalaAJITH has donated the following amounts for #coronavirusinindia relief..
PM Cares Fund: Rs 50 lakhs
CM Relief Fund: Rs 50 lakhs
FEFSI: Rs 25 lakhsTotally 1cr 25lakhs
@ThalaFC_ #Valimai #Vivegam #PerfectCitizenThalaAJITH pic.twitter.com/GDChQbb9il
— AJITH KUMAR FANS RAGE™ (@AKFansRage) April 7, 2020
#PerfectCitizenThalaAJITH
🔥🔥The Great Human Being, I have ever seen this Earth… Lub u soo much Thala.. 😘U r the great inspiration for us…🤩 Proud to be ur fan..😍 pic.twitter.com/Asc0nXtX6W— viju_charles (@vijubeni8) April 7, 2020
Ajith😍Sir&Shalini🤩Anni
Always Respect ❣️#PerfectCitizenThalaAJITH pic.twitter.com/eJnrvljHHk
— AKSURIYA𓃵™ (@Thalasuriya652) April 7, 2020
❤perfect man 😍
❤Perfect snap 😘
❤Perfect time 🙏
❤Perfect help ! 💐💐💐#ThalaAjith pic.twitter.com/RXcpaIbtQG— ͏One&OnlyAkFan (@OneandOnlyAkFan) April 7, 2020