தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தான் அதிகம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 149ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 69 பேரில் திருப்பூர் மாவட்டத்த்தை சேர்ந்தவர்கள் 13 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.